ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அறுபடை வீட்டு சஷ்டி கவசங்கள்


முருகனின் அறுபடை வீடுகள் மீது தேவராய சுவாமிகள் பாடியதாக கூறப்படும் கந்த சஷ்டி கவசங்கள் பற்றி முன்னமே பார்த்திருந்தாலும், அனைத்தும் ஒரே புத்தகமாக கிடைக்கவில்லை. இப்பொழுது ஒரே புத்தகமாக கிடைத்திருக்கிறது. இது 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதைவிட பழைய புத்தகம் கிடைக்காததால், இது நாம் அனைவரும் போற்றும் கவசம் எழுத்திய தேவராயர் எழுதியதுதானா என்பதில் ஐயம் இருந்தாலும். நம்புவோமாக.


தரவிறக்க: அறுபடை வீட்டு சஷ்டி கவசங்கள்

புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

சனி, 29 பிப்ரவரி, 2020

சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்


சென்ற முறை தேடிக்கிடைத்த முருகன் கவசம் போன்றே இந்த முறையும் ஒரு கவசம் கிடைத்துள்ளது. இதன் பெயர் சுப்பிரமணியர் கார்த்திகை கவசம். இதனை சித்த வைத்தியர் ஸ்ரீநிவாஸயோகி என்பவர் இயற்றியுள்ளார். இவர் காஞ்சியில் உள்ள திருநெறிகாரைக்காடென்னும் திருக்காலிமேடாம்பதி பழனியாண்டி சித்தாஸ்ரமத்தில் சித்த வைத்தியராக இருந்துள்ளார்.

இந்த புத்தகத்தில் விநாயகர் அகவலும் உள்ளது.

இணைப்பு: சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்

வியாழன், 10 அக்டோபர், 2019

திருமகள் பாடல்

செந்தாமரை மலரில் திகழ்கின்றவள்
ஶ்ரீரங்க நாதனெடு மகிழ்கின்றவள் (செந்தா)

சந்தான செளபாக்யம் தருகின்றவள்
தட்டாமல் ஒடோடி வருகின்றவள் (செந்தா)

வற்றாது பால்வழங்கும் பசுவானவள்
மடிமீதில் உறவாடும் சிசுவானவள் (செந்தா)

கற்றார்க்கும் கல்லார்க்கும் உயிரானவள்
கண்போகும் இடம்எங்கும் பயிரானவள் (செந்தா)

நன்செய்யும் புன்செய்யும் தானானவள்
நவதான்யப்புலம் எங்கும் மானானவள் (செந்தா)

பொன்செய்யும் வேளாளர் கரமானவள்
புவியோரை வாழ்விக்கும் வரமானவள் (செந்தா)

ஒலி: youtube.com

வியாழன், 26 செப்டம்பர், 2019

முருகர் கவசம்



கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஷண்முக கவசம் வரிசையில் இன்று இணையத்தில் தேடியதில் புதிதாக முருகர் கவசம் என்று ஒன்று கிடைத்தது. இதனை கூடலூர் இருளப்ப செட்டியார் இயற்றியுள்ளார். இதில் சில பகுதிகள் காகித கிழிசலில் இருப்பதால், என்ன வரிகள் என்று முழுமையாக தெரியவில்லை. தற்போது தேடியதுவரை வேறு பதிப்போ அல்லது புத்தகமோ இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை முருகனருளினால் வரும் காலங்களில் பகிர்கிறேன்.

இணைப்பு: முருகர் கவசம்

புதன், 25 செப்டம்பர், 2019

வாலை கும்மி

சித்தர்கள் வணங்கிய, குழந்தையென கொஞ்சிய, அருள் பொழியும் வாலை பெண்ணின் கும்மி பாட்டு. சிலர் இவளை பாலா எனவும், சிலர் இவளே திரிபுர சுந்தரி எனவும் அன்னை மனோன்மணியின் பிள்ளை பருவம் எனவும் கூறுகின்றனர். கேட்பவருக்கு கேட்பவற்றை அள்ளி வழங்கும் குழந்தை இவள்.

வாலை பெண்

இணையத்தில் கிடைத்த சித்தர் மகான் கொங்கணர் எழுதியதாக கிடைத்த "வாலை கும்மி"  என்னும் நூலையும், அதன் பாடலையும் இணைப்பில் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: இணைப்பில் உள்ள அனைத்தின் முழு உரிமையும் ஆசிரியருக்கே.

புத்தகம் 1: வாலை கும்மி

புதன், 18 செப்டம்பர், 2019

முருகவேள் பன்னிரு திருமுறை - மின்னூல்

தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை
தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை


வணக்கம்,

ஏற்கனவே முருகவேள் பன்னிரு திருமுறை பற்றி பதிவிட்டிருந்தேன், பல இடங்களில் தேடியும் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த புத்தகம் கிடைக்கவில்லை. தற்செயலாக இணையத்தில் தேடியபொழுது தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை அவர்கள் உரையெழுத்திய புத்தகங்கள் மின் நூலக கிடைத்தது, அதுவும் இரு வேறு பதிப்பகத்தார் பதிப்பில். இதனை பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

பதிப்பாளர்: ஸ்ரீ மதி மீனாட்சி கல்யாண சுந்தரம்
ஆண்டு: 1952


பதிப்பாளர்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
ஆண்டு: 1992 


புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.